உலகம்

செய்தி நேரலையின்போது ஈரான் தொலைக்காட்சி நிலையத்தை தாக்கிய இஸ்ரேல் - பதற வைக்கும் வீடியோ

Published On 2025-06-17 01:30 IST   |   Update On 2025-06-17 01:30:00 IST
  • காயமடைந்த நிலையில் செய்தி வெளியிடும் நிருபரின் காட்சிகளும் வெளியாகின.
  • ஈரான் 350 ஏவுகணைகளையும் 30 முதல் 60 ஏவுகணைகளையும் ஏவியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

நேற்று இரவு, இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஈரானின் அரசு தொலைக்காட்சி தலைமையகம் கடும் சேதமடைந்தது. இந்தத் தாக்குதல் நேரடி செய்தி ஒளிபரப்பின்போது நிகழ்ந்தது. வெடிப்புச் சம்பவமும், நேரலையில் பேசிக்கொண்டிருந்த பெண் செய்தி வாசிப்பாளர் மேடையில் இருந்து இறங்கி பாதுகாப்புக்காக வெளியேறினார்.

தாக்குதலுக்குப் பிறகு கட்டிடம் இடிந்து விழும் காட்சிகளும், காயமடைந்த நிலையில் செய்தி வெளியிடும் நிருபரின் காட்சிகளும் வெளியாகின.

இஸ்ரேல் தெஹ்ரான் மக்களை வெளியேறுமாறு எச்சரித்த சிறிது நேரத்திலேயே இந்தத் தாக்குதல் நடந்தது.

மத்திய இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் விமான தளத்தைப் பார்வையிட்ட பிறகு, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "தெஹ்ரானுக்கு மேலே உள்ள வானம் இஸ்ரேலிய விமானப்படையின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. இஸ்ரேல் வெற்றிப் பாதையில் உள்ளது" என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஈரான் இஸ்ரேலுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல் அவிவிலிருந்து மக்கள் வெளியேற வேண்டும் என்றும், ஈரான் வலுவான தாக்குதலுக்குத் தயாராகி வருவதாகவும் எச்சரித்துள்ளது.

இதுவரை, ஈரான் 350 ஏவுகணைகளையும் 30 முதல் 60 ஏவுகணைகளையும் ஏவியுள்ளது. இஸ்ரேலில் ஈரான் நடத்திய தாக்குதல்களில் இதுவரை எட்டு பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலிய இராணுவம் இதுவரை 24 பேர் கொல்லப்பட்டதாகவும், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் உறுதிப்படுத்தியுள்ளது.

அதேநேரம் ஈரானில் 220க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், யுஎஸ்எஸ் நிமிட்ஸ் போர்க்கப்பல் மத்திய கிழக்கு நோக்கிச் செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Tags:    

Similar News