உலகம்

கனடாவில் இந்தியர் கத்தியால் குத்திக் கொலை- ஒருவர் கைது

Published On 2025-04-05 09:09 IST   |   Update On 2025-04-05 09:09:00 IST
  • சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
  • பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்.

கனடாவின் ஒட்டாவா அருகே உள்ள ராக்லேண்ட் பகுதியில் இந்தியர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்த மேல் விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

மேலும், கத்தியால் குத்தப்பட்டு இந்தியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும். உயிரிழந்த இந்தியரின் குடும்பத்தினரோடு நாங்கள் தொடர்பில் இருக்கிறோம் என கனடாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News