உலகம்

இந்தியா இலங்கை கொடிகள்       சாகுபடி பணி

யூரியா உரம் வாங்குவதற்கு இலங்கைக்கு கடன் உதவி- இந்தியா வழங்கியது

Published On 2022-06-10 20:24 GMT   |   Update On 2022-06-10 20:24 GMT
  • நெல் சாகுபடி பருவத்திற்காக இந்தியாவிடம் இலங்கை கடன் உதவி கோரியிருந்தது.
  • உரத்தட்டுப்பாடு நிலவுவதால், உணவு பொருள் நெருக்கடி ஏற்படும் என்று இலங்கை பிரதமர் எச்சரித்திருந்தார்.

கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில், உணவு, மருந்து, சமையல் எரிவாயு, வாகன எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

அரசுக்கு எதிராக இலங்கையில் தொடர் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இலங்கையில் உரத்தட்டுப்பாடு நிலவுவதால், உணவு பொருள் விநியோகத்தில் நெருக்கடி ஏற்படும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

நெல் பருவ சாகுபடிக்கு 65,000 மெட்ரிக் டன் யூரியா உரம் தேவைப்படுவதால், உடனடி உர இறக்குமதி செய்வதற்கு இந்தியாவிடம், இலங்கை கடன் உதவி கோரியுள்ளதாக இந்திய தூதரகம் அறிக்கையில் ஒன்றில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், உர இறக்குமதிக்காக இந்தியா 55 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இலங்கைக்கு கடன் வழங்கி உள்ளதாகவும், இது இலங்கையின் மோசமான பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க உதவும் என்று இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது

முன்னதாக இலங்கை நிதியமைச்சக செயலாளர் சிறிவர்தன, எக்ஸிம் வங்கியுடன் இருந்து கடன் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். நிகழ்ச்சியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே ஆகியோர் பங்கேற்றனர்

Tags:    

Similar News