உலகம்

"ஒபாமாவை அதிரடியாக கைது செய்யும் FBI அதிகாரிகள்.." AI வீடியோ வெளியிட்ட டிரம்ப்

Published On 2025-07-21 22:42 IST   |   Update On 2025-07-21 22:42:00 IST
  • சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் யாரும் இல்லை என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
  • 2016 தேர்தலில் ரஷியாவின் உதவியுடன் டிரம்ப் வென்றதாக குற்றம்சாட்டினார்.

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை FBI கைது செய்து அழைத்துச் செல்லும் செயற்கை நுண்ணறிவு வீடியோவை டிரம்ப் பகிர்ந்துள்ளார். சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் யாரும் இல்லை என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

வீடியோ, ஒபாமா டிரம்புடன் பேசிக் கொண்டிருந்தபோது அதிகாரிகள் அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்வதை காட்டுகிறது. பின்னர் ஆரஞ்சு நிற உடை அணிந்து ஒபாமா சிறைச்சாலையில் இருப்பதையும் இந்தக் காட்சிகள் காட்டுகின்றன.

முன்னதாக 2016 தேர்தலில் ரஷியாவின் உதவியுடன் டிரம்ப் வென்றதாக பொய்யான குற்றச்சாட்டுகளுக்காக ஒபாமா விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க தேசிய புலனாய்வு முகமை இயக்குனர் துளசி கப்பார்ட் தெரிவித்திருந்தார். 

Tags:    

Similar News