உலகம்

ரோல்ஸ்ராய்ஸ் காரை அசத்தலாக ஓட்டும் 72 வயது இந்திய பெண்- வீடியோ

Published On 2025-08-28 14:42 IST   |   Update On 2025-08-28 14:42:00 IST
  • இன்ஸ்டாகிராமில் கார் வீடியோக்கள் மூலம் ஏற்கனவே பிரபலமானவராக திகழ்கிறார்.
  • கனரக வாகனங்களையும் திறம்பட ஓட்டும் திறன் படைத்தவர்.

துபாயின் தெருக்களில் 72 வயதான கேரளாவை சேர்ந்த மணியம்மா என்ற பெண் ஸ்டைலாக கார் ஓட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வீடியோவில் மணியம்மா வெள்ளை நிற ரோல்ஸ்ராய்ஸ் காரை ஓட்டுகிறார்.

கட்டுப்பாடுகள் நிறைந்த துபாய் சாலைகளில் அவர் அசத்தலாக கார் ஓட்டும் காட்சிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மணியம்மா கேரளாவில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். அவர் இன்ஸ்டாகிராமில் கார் வீடியோக்கள் மூலம் ஏற்கனவே பிரபலமானவராக திகழ்கிறார்.

தற்போது துபாயில் கார் ஓட்டுவதன் மூலம் மேலும் பிரபலமாகி உள்ளார். அவரிடம் 11 வகையான டிரைவிங் லைசென்ஸ்கள் உள்ளது. அவர் சொகுசு கார்களை மட்டுமல்லாமல் ரோடு ரோலர்கள், கிரேன்கள், பஸ்கள், ஜே.சி.பி. உள்ளிட்ட கனரக வாகனங்களையும் திறம்பட ஓட்டும் திறன் படைத்தவர். அவர் துபாயில் கார் ஓட்டும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் வயது என்பது வெறும் எண் தான் என்பதற்கு மணியம்மா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என பதிவிட்டுள்ளனர். 



Tags:    

Similar News