உலகம்

CPEC: சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்க முடிவு - இந்தியாவுக்கு சிக்கல்

Published On 2025-05-21 18:00 IST   |   Update On 2025-05-21 18:00:00 IST
  • பெய்ஜிங்கில் நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
  • அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்கிறது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது போது இந்தியாவுடன் நின்ற தாலிபான் அரசாங்கத்தை சீனா இப்போது கவர முயற்சிக்கிறது.

அதன்படி இன்று (புதன்கிழமை) சீனா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஒரு பெரிய முடிவை எடுத்தன.

சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை (CPEC) ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்க மூன்று நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் கூட்டாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

பெய்ஜிங்கில் நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார், சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி மற்றும் ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தியா CPEC-ஐ பலமுறை கடுமையாக விமர்சித்துள்ளது. ஏனென்றால் அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்கிறது. சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியையும் இந்தியா எதிர்க்கிறது. தற்போது இந்த திட்டத்தில் CPEC இன் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

முத்தரப்பு சந்திப்பில், சீன வெளியுறவு அமைச்சகம், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் தேசிய கண்ணியத்தைப் பாதுகாக்க சீனா ஆதரவளிப்பதாக கூறியுள்ளது.

Tags:    

Similar News