உலகம்

எரிமலை வெடித்து சிதறும்போது, காதலிக்கு Propose செய்த காதலன் - புகைப்படங்கள் வைரல்

Published On 2025-07-05 14:47 IST   |   Update On 2025-07-05 14:47:00 IST
  • இந்த அழகிய தருணத்தின் புகைப்படங்களை மார்க் ஸ்டீவர்ட் பகிர்ந்துள்ளார்.
  • இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

ஹவாயில் உள்ள கிலோவியா எரிமலை வெடித்து சிதறும்போது, மார்க் ஸ்டீவர்ட் என்ற நபர் தனது நீண்ட நாள் காதலி ஒலிவியாவிடம் தனது காதலை தெரிவித்தார். அவரும் காதலை ஏற்றுக்கொண்டார்.

இந்த அழகிய தருணத்தின் புகைப்படங்களை மார்க் ஸ்டீவர்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

புகைப்படங்களில், எரிமலைக்குழம்பு காற்றில் பறக்கிறது. மார்க் ஸ்டீவர்ட் தனது காதலியின் முன்பு மண்டியிட்டு மோதிரத்தை நீட்டியபடி உள்ளார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. 

Tags:    

Similar News