உலகம்

சூரிய ஒளி பட்டால் கருப்பாகி விடுவோம் என்ற அச்சத்தில் பெண் செய்த செயலால் நடந்த விபரீதம்

Published On 2025-05-22 16:55 IST   |   Update On 2025-05-22 16:55:00 IST
  • சூரிய ஒளியில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள மக்கள் பல வழிமுறைகளை கையாளுகின்றனர்.
  • சூரிய ஒளியைத் தவிர்ப்பதால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் குறித்து நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சீனாவில் 40 வயது மதிப்பக்க பெண் ஒருவர், சூரிய ஒளி பட்டால் கருப்பாகி விடுவோம் என்ற பயத்தில் பல ஆண்டுகளாக வெயிலில் இருந்து தன்னை தற்காத்துக் கொண்டுள்ளார்.

அவர் உச்சி முதல் பாதம் வரை சூரிய ஒளி படாமல் பார்த்துக் கொண்டு வந்துள்ளார். இதனை அவரது பெற்றோர்களும் கண்டு கொள்வதில்லை. சீனாவில் சூரிய ஒளியில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள மக்கள் பல வழிமுறைகளை கையாளுகின்றனர். 

அதன்படி பெண்கள் அகன்ற விளிம்பு கொண்ட முகமூடிகள், சூரிய பாதுகாப்பு கையுறைகள், குளிர்விக்கும் முகமூடிகள் மற்றும் லேசான UV-எதிர்ப்பு ஹூடிகளைப் (தொப்பி வைத்த சட்டை) பயன்படுத்தி சூரிய ஒளியில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்கிறார்கள். அந்த வகையில் இந்த பெண்ணும் இதனை பின்பற்றி வந்துள்ளார்.

 

இந்நிலையில் அவர் மெத்தையில் திரும்பி படுத்தபோது எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரை சோதித்த டாக்டர்கள் அவருக்கு வைட்டமின் டி சத்து குறைபாடு ஏற்பட்டு, எலும்புகள் வலுவிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதிகப்படியான சூரிய ஒளியைத் தவிர்ப்பதால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் குறித்து நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சூரிய ஒளியை நீண்ட காலமாகத் தவிர்ப்பது எலும்புகள் பலவீனமடைதல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். உடல் நிறத்திற்காக ஆரோக்கியத்தை கெடுத்து கொள்ள வேண்டாம் என சீன மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். 

Tags:    

Similar News