உலகம்

மாலத்தீவை நோக்கி நகரும் சீன உளவு கப்பல்: கண்காணிக்கும் இந்திய கடற்படை

Published On 2024-01-23 13:23 GMT   |   Update On 2024-01-23 13:23 GMT
  • சீன உளவு கப்பல் ஒன்று இந்திய பெருங்கடலில் நுழைந்துள்ளது.
  • அது மாலத்தீவை நோக்கி நகர்ந்து வருவதாக தகவல் வெளியானது.

மாலி:

இந்தியா மற்றும் மாலத்தீவு இடையிலான உறவு சமீபத்தில் விரிசலடைந்துள்ளது. இதைப் பயன்படுத்தி மாலத்தீவுடன் நெருக்கம் காட்டி வருகிறது சீனா.

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சீனா சென்றிருந்தபோது மாலத்தீவு மற்றும் சீன அரசுகளுக்கு இடையே 20க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

மேலும், பொருளாதார ரீதியிலும், ராணுவ ரீதியிலும் தன்னை பலப்படுத்திக் கொள்ள சீனா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவிற்கு பல்வேறு வகைகளில் அழுத்தம் கொடுத்து வரும் சீனா தற்போது மாலத்தீவு அரசுடன் நெருக்கமான உறவை பேணி வருகிறது. மாலத்தீவுடனான சீனாவின் நெருக்கம் இந்தியாவுக்கு புதிய தலைவலியாக மாறியுள்ளது.

இந்நிலையில், சியாங் யாங் ஹாங் 03 என்ற சீன உளவுக்கப்பல் ஒன்று இந்திய பெருங்கடலில் நுழைந்துள்ளது. அது மாலத்தீவை நோக்கி நகர்ந்து வருவதாக தகவல் வெளியானது. இதனால் இந்திய கடற்படை உஷார்படுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தங்கள் கடற்கரையில் வெளிநாட்டுக் கப்பல்கள் நுழைய இலங்கை தடை விதித்த நிலையில், அங்கு செல்லவிருந்த சீன உளவு கப்பல் மாலத்தீவை நோக்கிச் செல்வதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News