உலகம்

கராச்சி நகரில் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடம்

பாகிஸ்தானில் வசிக்கும் சீனர்கள் மீது தாக்குதல்- ஒருவர் சுட்டுக் கொலை

Update: 2022-09-28 19:34 GMT
  • அடையாளம் தெரியாத நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
  • காயமடைந்த சீனர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.

கராச்சி:

பாகிஸ்தானின் கராச்சி நகரின் சதார் பகுதியில் செயல்பட்டு வரும் சீன பல் மருத்துவமனையில் இருந்தவர்கள் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளார். இதில் சீனர் ஒருவர் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்ததாக பாகிஸ்தான் ஊடக தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஆசாத் ரசா தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News