உலகம்

சீன வங்கி முன்பு போராட்டம் 

சீனாவில் கிராமப்புற வங்கிகளில் நிதி மோசடியில் ஈடுபட்ட 234 பேர் கைது

Published On 2022-08-30 09:10 IST   |   Update On 2022-08-30 09:11:00 IST
  • ஆன்லைன் சேவை நிறுத்தப்பட்டதால் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு.
  • வட்டி மானியம் வசதியான வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டதாக புகார்.

ஹெனான்:

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள பல கிராமப்புற வங்கிகளில் நிதி மோசடி நடைபெற்றதாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. சட்டவிரோதமாக பெறப்பட்ட நிதியின் ஒரு பகுதியை வங்கி அதிகாரிகள் பயன்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர்

வங்கிகளின் வட்டி மானியம் தரகர்களால் சுரண்டப்பட்டதாகவும்  பணக்கார வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அது வழங்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் ஹெனான் மாகாணத்தில் உள்ள நான்கு கிராமப்புற வங்கிகள் தங்கள் ஆன்லைன் சேவைகளை நிறுத்திவிட்டன, இதனால் வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

கடந்த சில மாதங்களாக வாடிக்கையாளர்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து, வங்கிகள் நிதி முறைகேடு சீன மக்களிடையே மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. சீன மத்திய வங்கியின் கிளைக்கு வெளியே ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பொதுமக்கள் வைப்பு நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக 234 அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News