உலகம்

ஸ்கைடைவிங் விபத்தில் கனடா மாடல் அழகி பலி

Published On 2022-09-05 02:42 GMT   |   Update On 2022-09-05 02:42 GMT
  • சரியான நேரத்தில் பாராசூட்டை திறக்காததால் இந்த விபரீதம் நடத்துள்ளது.
  • ‘டிக்-டாக்’கில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் இவரை பின்தொடர்கின்றனர்.

ஒட்டாவா :

கனடாவை சேர்ந்த பிரபல மாடல் அழகி டான்யா பர்தாசி. 21 வயதான இவர் கடந்த 2017-ம் ஆண்டின் 'மிஸ் கனடா' அழகி போட்டியில் அரைஇறுதி சுற்று வரை சென்று புகழ் பெற்றார். டொராண்டோ பல்கலைக்கழகத்தில் தத்துவம் படித்து வந்த டான்யா பர்தாசி 'டிக்-டாக்' பிரபமும் கூட. 'டிக்-டாக்'கில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் இவரை பின்தொடர்கின்றனர். இந்த நிலையில் டான்யா பர்தாசி கனடாவின் பிரபல 'ஸ்கைடைவிங்' பயிற்சி நிறுவனத்தில் 'ஸ்கைடைவிங்' பயிற்சி பெற்று வந்தார். அவர் பலமுறை பயிற்சியாளருடன் சேர்ந்து விமானத்தில் இருந்து குதித்து 'ஸ்கைடைவிங்' செய்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று டான்யா பர்தாசி முதல் முறையாக தனியாக விமானத்தில் இருந்து குதித்து 'ஸ்கைடைவிங்' செய்தார். ஆனால் அவர் தரையிறங்குவதற்கு முன்பு சரியான நேரத்தில் பாராசூட்டை திறக்க தவறிவிட்டார். தரையில் இருந்து மிகவும் குறைவான உயரத்தில் இருந்தபோது தாமதமாக பாராட்டை திறந்ததால் டான்யா பர்தாசி கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 'டிக்-டாக்' பிரபலம் டான்ய பர்தாசி 'ஸ்கைடைவிங்' விபத்தில் உயிரிழந்தது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Similar News