உலகம்

தண்டவாளத்தில் குண்டுவெடிப்பு.. பாகிஸ்தானில் தடம் புரண்ட ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரெயில்

Published On 2025-06-19 01:11 IST   |   Update On 2025-06-19 01:11:00 IST
  • ஜாகோபாபாத்தில் உள்ள கால்நடை சந்தை அருகே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
  • ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரெயில் தாக்கப்பட்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஜாகோபாபாத் மாவட்டத்தில், பலூசிஸ்தானை ஒட்டியுள்ள பகுதியில், நேற்று (புதன்கிழமை) ரெயில்வே தண்டவாளம் அருகே குண்டுவெடித்ததில், ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஆறு பெட்டிகள் தடம் புரண்டன. இந்த சம்பவத்தில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

ஜாகோபாபாத்தில் உள்ள கால்நடை சந்தை அருகே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகவும், இதனால் குவெட்டாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரெயிலின் ஆறு பெட்டிகள் தடம் புரண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் அப்பகுதியைச் சுற்றி வளைத்து, வெடிவிபத்தின் தன்மை மற்றும் குற்றவாளிகளைக் கண்டறிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீப மாதங்களில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரெயில் தாக்கப்பட்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும். கடந்த மார்ச் மாதம், குவெட்டாவிலிருந்து பெஷாவருக்குச் சென்று கொண்டிருந்தபோது, பலூசிஸ்தான் மாகாணத்தின் போலன் மாவட்டத்தில் இந்த ரெயில் தாக்கப்பட்டு கடத்தப்பட்டது. அந்த சம்பவத்திற்கு பலூசிஸ்ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரெயில் தாக்கப்பட்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும்.தான் விடுதலை இராணுவம் (BLA) பொறுப்பேற்றது. பின்னர் ராணுவ நடவடிக்கை மூலம் ரெயில் மீட்கப்பட்டது. 

Tags:    

Similar News