உலகம்

கொரோனா தடுப்பூசி

200 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை - பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் வாழ்த்து

Published On 2022-07-19 19:19 GMT   |   Update On 2022-07-19 19:22 GMT
  • இந்தியாவில் 90 சதவீதம் பேர் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.
  • கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தியிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்:

கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி முதல் செலுத்தப்படுகின்றன.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி 200 கோடி டோஸ் என்ற மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது. 18 மாதங்களில் 200 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டது புதிய சாதனை என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்தியாவில் 200 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை செய்துள்ளதற்கு பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பில்கேட்ஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், வாழ்த்துகள் நரேந்திர மோடி. சிறந்த நிர்வாகத்துக்கான மற்றொரு மைல் 200 கோடி தடுப்பூசிகள். கொரோனாவின் தாக்கத்தைக் குறைப்பதற்காக இந்திய தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மற்றும் இந்திய அரசாங்கத்துடனான எங்கள் தொடர்ச்சியான கூட்டாண்மைக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News