உலகம்

இந்தியாவுடன் பிரச்சனை உள்ளது: வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் சொல்கிறார்

Published On 2025-09-25 16:58 IST   |   Update On 2025-09-25 16:58:00 IST
  • வங்கதேசம்- இந்தியா இடையிலான உறவில் விரிசல் உள்ளது.
  • கடந்த வருடம் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தை இந்தியா விரும்பவில்லை.

வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதனால் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா, பதவியில் இருந்து விலகி இந்தியாவுக்கு தப்பி வந்தார். அதன்பிறகு, முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்த அரசு பொதுத் தேர்தலை நடத்த ஆயத்தமாகி வருகிறது.

ஐ.நா. பொதுச்சபையில் கலந்து கொள்வதற்கான அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள முகமது யூனுஸ் கூறியதாவது:-

வங்கதேசம்- இந்தியா இடையிலான உறவில் விரிசல் உள்ளது. ஏனென்றால், ஷேக் ஹசீனாவை பிரதமர் பதவியில் இருந்து வெளியேற்ற முக்கிய காரணமாக அமைந்த கடந்த வருடம் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தை இந்தியா விரும்பவில்லை.

இந்திய மீடியாக்கள் போலி தகவல்களை பரப்பின. இது பதட்டத்தை மேலும் மோசமடைய வழிவகுத்தது. இந்தியாவில் இருந்து ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வந்தன. அந்த வீடியோக்களில் மாணவர்களின் போராட்டத்தை இஸ்லாமிய இயக்கம் எனக் கூறின.

பிரச்சனையை உருவாக்கிய ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இது இந்தியா- வங்கதேசம் இடையே பிரச்சனையை ஏற்படுத்தியது.

இவ்வாறு முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News