உலகம்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் முழு உறுப்பினராகும் வாய்ப்பை தடுத்த இந்தியா: அஜர்பைஜான் குற்றச்சாட்டு
- இந்தியா- பாகிஸ்தான் மோதலின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக அஜர்பைஜான் கருத்து.
- பாகிஸ்தானோடு சகோதரத்துவத்திற்கு முன்னுரிமை அளிக்கும் என அந்நாட்டு அதிபர் பேசியதாக செய்தி வெளியானது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு சீனாவில் உள்ள தியான்ஜின் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டின்போது அஜர்பைஜான் இந்த அமைப்பின் முழு உறுப்பினராகும் முயற்சியை இந்தியா தடுத்து நிறுத்தியது.
ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்ததால் இந்தியா பழிவாங்க முயல்கிறது என குற்றம்சாட்டியுள்ளது.
மாநாடு நடைபெற்ற இடத்தில் அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்-ஐ சந்தித்தார். அப்போது, இந்தியா- பாகிஸ்தான் இடையிலான மோதலில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்தார். மேலும், உலகளாவிய மன்றங்களில் இந்தியாவின் நடவடிக்கை இருந்தபோதிலும், அஜர்பைஜான் பாகிஸ்தானோடு சகோதரத்துவத்திற்கு முன்னுரிமை அளிக்கும் எனக் கூறியதாக செய்திகள் வெளியானது.