உலகம்

மியான்மரில் பள்ளி மீது குண்டுவீசிய ராணுவம்.. 22 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் உயிரிழப்பு

Published On 2025-05-13 04:33 IST   |   Update On 2025-05-13 04:33:00 IST
  • இந்தப் பகுதி ராணுவ ஆட்சிக்கு எதிரான ஜனநாயக ஆதரவு கிளர்ச்சி இயக்கத்தின் கோட்டையாகக் கருதப்படுகிறது.
  • இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்திற்கு மத்தியில் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

மியான்மரின் சகாயிங் பகுதியில் உள்ள ஓஹே தெய்ன் ட்வின் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியின் மீது நேற்று காலை மியான்மர் ராணுவம் குண்டுவீசி நடத்திய வான்வழித் தாக்குதலில் 22 மாணவர்களும் 2 ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். இந்தப் பகுதி ராணுவ ஆட்சிக்கு எதிரான ஜனநாயக ஆதரவு கிளர்ச்சி இயக்கத்தின் கோட்டையாகக் கருதப்படுகிறது. தாக்குதலுக்கு உள்ளான பள்ளி ஜனநாயக ஆதரவு இயக்கத்தால் நடத்தப்பட்டது. ஆனால் தாக்குதல் நடந்த நேரத்தில் அங்கு தீவிரமான சண்டை எதுவும் இல்லை.

தாக்குதலைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியான தேசிய ஒற்றுமை அரசாங்கம் (NUG) இந்த சம்பவத்தை கண்டித்தது.

மியான்மர் ராணுவம் அரசு ஊடகங்கள் மீதான தாக்குதலை மறுத்துள்ளதுடன், எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களைப் பரப்புவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. இருப்பினும், நேரில் கண்ட சாட்சிகளும் சுயாதீன ஊடக அறிக்கைகளும் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளன.

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்திற்கு மத்தியில் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. சாகைங் பகுதியில் இதுபோன்ற தாக்குதல்கள் இதற்கு முன்பு நடந்துள்ளன. அதில் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்தும் உள்ளனர். 

Tags:    

Similar News