உலகம்

அமெரிக்காவில் பறந்த உளவு பலூன்... சீன பயணத்தை ஒத்திவைக்கும் வெளியறவுத்துறை மந்திரி

Published On 2023-02-03 16:09 GMT   |   Update On 2023-02-03 16:09 GMT
  • பலூனை சுட்டு வீழ்த்தினால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.
  • சீன பயணத்தின்போது இந்த பலூன் விவகாரம் ஆதிக்கம் செலுத்துவதை பிளிங்கன் விரும்பவில்லை என தகவல்

வாஷிங்டன்:

அமெரிக்காவில் ராணுவத்தின் முழு கண்காணிப்பில் இருக்கும் அணுசக்தி ஏவுதளம் அமைந்துள்ள மொன்டானா பகுதியில், சீனாவைச் சேர்ந்த உளவு பலூன் பறப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த மர்ம பலூனை சுட்டு வீழ்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அணுசக்தி ஏவுதளம் மீது பறக்கும்போது பலூனை சுட்டு வீழ்த்தினால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் அந்த முயற்சியை அமெரிக்க ராணுவம் கைவிட்டது. அதன் நகர்வை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், வெளியுறவுத்துறை மந்திரி அந்தோணி பிளிங்கன், தனது சீன பயணத்தை ஒத்திவைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீன அதிகாரிகளுடனான தனது சந்திப்புகளின்போது, இந்த பலூன் விவகாரம் ஆதிக்கம் செலுத்துவதை பிளிங்கன் விரும்பவில்லை என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியதாக ஏபிசி செய்தி வெளியிட்டிருக்கிறது. அவரது சீனப் பயணம் ஒத்திவைக்கப்படும் என்று ப்ளூம்பெர்க் நியூஸ் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News