உலகம்
பொதுவெளியில் முதல் முறையாக சக்கர நாற்காலியில் வந்த போப் பிரான்சிஸ்

பொதுவெளியில் முதல் முறையாக சக்கர நாற்காலியில் வந்த போப் பிரான்சிஸ்

Update: 2022-05-06 03:05 GMT
ரோம் நகரில் ஒரு கூட்டத்தில் பங்கேற்க உலகமெங்கும் இருந்து வந்துள்ள கன்னியாஸ்திரிகள், சகோதரிகளை வாடிகனில் போப் பிரான்சிஸ் சந்தித்தார்.
வாடிகன் :

85 வயதான போப் பிரான்சிஸ் கடந்த சில காலமாகவே வலது முழங்கால் வலியால் அவதிப்படுகிறார். குறிப்பாக தசைநார் அழுத்தத்தால் ஏற்படுகிற வலி அவரை கஷ்டப்படுத்துகிறது. வலியில் இருந்து நிவாரணம் பெறுவதற்காக ஊசி மருந்து செலுத்திக்கொண்டதாக சமீபத்தில் அவர் வெளிப்படுத்தினார். ஆனாலும் தொடர்ந்து நடப்பதற்கு போராடி வந்தார்.

இந்த நிலையில், ரோம் நகரில் ஒரு கூட்டத்தில் பங்கேற்க உலகமெங்கும் இருந்து வந்துள்ள கன்னியாஸ்திரிகள், சகோதரிகளை வாடிகனில் நேற்று போப் பிரான்சிஸ் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்து, ஒரு உதவியாளர் துணையுடன் வந்தார்.

பொதுவெளியில் போப் பிரான்சிஸ் சக்கர நாற்காலியை பயன்படுத்தியது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News