உலகம்
உக்ரைனில் போர் நடைபெறும் பகுதி, இந்திய தூதரகம்

உக்ரைன் தலைநகரில் இருந்து இந்திய தூதரகம், போலந்துக்கு மாற்றம்

Published On 2022-03-13 23:59 IST   |   Update On 2022-03-13 23:59:00 IST
உக்ரைனில் பாதுகாப்பு நிலைமை மோசம் அடைந்துள்ளதால் இந்திய தூதரகத்தை இட மாற்றம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

உக்ரைன் மீது ரஷியா நடத்திய வரும் போர் 18 நாட்களைக் கடந்து நீடித்து வருகிறது. தலைநகர் கீவ் நகரை கைப்பற்ற ரஷியப்படைகள் தீவிரம் காட்டி வருகின்றன.  

இந்த நிலையில் கீவ் நகரில் உள்ள இந்திய தூதரகத்தை தற்காலிகமாக போலந்து நாட்டுக்கு மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உக்ரைனில் நாட்டின் மேற்குப் பகுதி  தாக்குதல்களால் பாதுகாப்பு நிலைமை அதிவேகமாக மோசம் அடைந்து வருகிறது. இதனால் உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தை தற்காலிகமாக போலந்துக்கு இட மாற்றம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தொடர்ந்து நிலைமையின் முன்னேற்றத்துக் ஏற்ப, தூதரக மாற்றம் குறித்து மறு மதிப்பீடு செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Similar News