உலகம்
வெடிகுண்டு தாக்குதல்

பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல் - 5 வீரர்கள் பரிதாப பலி

Published On 2022-03-09 00:08 IST   |   Update On 2022-03-09 00:08:00 IST
பலுசிஸ்தானில் நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு அம்மாகாண முதல் மந்திரி மீர் அப்துல் குத்தூஸ் பிசெஞ்ஜோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
கராச்சி:

பாகிஸ்தானின் தென்மேற்கில் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சிபி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 5 பாதுகாப்புப் படைவீரர்கள் பலியாகினர். மேலும், 30 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 5 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.

குண்டுவெடிப்பு நடந்த பலுசிஸ்தானில் நடைபெற்ற கலாசார விழாவில் பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி பங்கேற்க சென்ற நிலையில் வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News