உலகம்
கோப்பு படம்

அந்தமான் நிக்கோபரில் உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை

Published On 2022-03-08 14:37 IST   |   Update On 2022-03-08 14:37:00 IST
பஞ்சாயத்து தேர்தல்களிலும், போர்ட் பிளேர் நகராட்சியில் நடந்த தேர்தலிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

போர்ட்பிளேர்:

அந்தமான் மற்றும் நிக்கோ பார் தீவுகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 685 இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. அங்கு கிராமப்புறங்களில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தல்களிலும், போர்ட் பிளேர் நகராட்சியில் நடந்த தேர்தலிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. ஜே.என்.ஆர்.எம். கல்லூரி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. இந்த தேர்தலில் பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் 110 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

Similar News