உலகம்
விசா கார்டு

ரஷியாவில் சேவையை நிறுத்தியது விசா, மாஸ்டர்கார்டு நிறுவனங்கள்

Published On 2022-03-06 00:26 GMT   |   Update On 2022-03-06 00:26 GMT
ரஷிய வங்கிகளால் வழங்கப்படும் கார்டுகள் இனி மாஸ்டர்கார்டு நெட்வொர்க்கால் ஆதரிக்கப்படாது என மாஸ்டர்கார்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சான் பிரான்சிஸ்கோ:

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து 10 நாட்கள் ஆகிவிட்டன. இந்த 10 நாளில் அந்நாட்டின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு, வான்தாக்குதல், பீரங்கி தாக்குதல் என நடத்தி உருக்குலைய வைத்து வருகிறது ரஷியா. அதே நேரம் உக்ரைனும் ஈடுகொடுத்து போராடி வருகிறது. 

இந்நிலையில், ரஷியாவில் வரவிருக்கும் நாட்களில் விசா கார்டு பரிவர்த்தனைகள் துண்டிக்கப்படும் என விசா நேற்று கூறியது.

விசா கார்டுகள் தடை செய்யப்பட்டவுடன் ரஷியாவில் வழங்கப்பட்ட கார்டுகள் வெளிநாட்டில் வேலை செய்யாது. வெளிநாட்டில் வழங்கப்பட்ட கார்டுகள் ரஷியாவிற்குள் வேலை செய்யாது என அறிவித்துள்ளது.

இதேபோல், உக்ரைன் மீதான ரஷிய போர் அதிர்ச்சியூட்டும் மற்றும் பேரழிவு தரக்கூடியது எனக்கூறிய மாஸ்டர்கார்டு, விசாவைப் போலவே மாஸ்டர்கார்டு தடையும் இருக்கும் என அறிவித்தது.

ரஷிய வங்கிகளால் வழங்கப்படும் கார்டுகள் இனி மாஸ்டர்கார்டு நெட்வொர்க்கால் ஆதரிக்கப்படாது. நாட்டிற்கு வெளியே வழங்கப்படும் எந்த மாஸ்டர்கார்டும் ரஷிய வணிகர்கள் அல்லது ஏ.டி.எம்.களில் வேலை செய்யாது என தெரிவித்துள்ளது
Tags:    

Similar News