செய்திகள்
பரிதா அல் ஹொசானி

முதியோர்களுக்கு, வீட்டில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு- அமீரக சுகாதாரத்துறை அதிகாரி தகவல்

Published On 2021-01-13 03:20 GMT   |   Update On 2021-01-13 03:20 GMT
அமீரகத்தில் விரைவில் முதியவர்களுக்கு வீட்டில் வைத்தே கொரோ னா தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் டாக்டர் பரிதா அல் ஹொசானி தெரிவித்தார்.
அபுதாபி:

அபுதாபி சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் டாக்டர் பரிதா அல் ஹொசானி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உலகின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரசின் அடுத்த மரபணு உருமாற்றமான சார்ஸ் கோவிட் 2 என்ற வகையானது தற்போது பரவி வருகிறது. இதில் வைரசின் உருமாற்றங்களை அடையாளம் காணும் முயற்சிகளை தொடர வேண்டியது அவசியமாகும். தொடர்ந்து புதிய வகை தொற்று பரவாமல் தடுக்கவும், அதன் தீவிரத்தன்மை அதிகரிக்காமல் தொடரவும் தடுப்பூசி முக்கியமான தீர்வுகளில் ஒன்றாக உள்ளது. அமீரக சுகாதாரத்துறையின் சார்பில் தொடர்ந்து நிபுணர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் ஒத்துழைப்புடன் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அமீரக சுகாதாரத்துறை கொரோனா வைரசை கையாளுவதில் தனது திறனை நிரூபித்துள்ளது. சுகாதார மையங்கள் மற்றும் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்ததன் மூலம் கொரோனா பரவலானது கண்டுபிடிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகிறது.

இதில் தற்போது முதியவர்களுக்கு அவரவர் வீடுகளுக்கே ஊழியர்கள் சென்று கொரோனா தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த திட்டமானது செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News