செய்திகள்

ஜகர்தாவில் இருக்கும் தலைநகரை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய இந்தோனேசியா அதிபர் முடிவு

Published On 2019-04-29 16:39 IST   |   Update On 2019-04-29 16:39:00 IST
இந்தோனேசியா நாட்டின் தலைநகரை ஜகர்தாவில் இருந்து ஜாவா தீவில் உள்ள வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய அந்நாட்டின் அதிபர் தீர்மானித்துள்ளார். #Indonesiacapital
ஜகர்தா:

சுமார் 26 கோடி மக்கள் வாழும் இந்தோனேசியா நாட்டின் தலைநகரான ஜகர்தாவில் மட்டும் சுமார் ஒரு கோடி மக்கள் வசித்து வருகின்றனர். அருகாமையில் உள்ள நகர்ப்புறங்களில் சுமார் 3 கோடி மக்கள் வசிப்பதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தற்போதுள்ள பெருநகரங்களில் மக்கள் நெருக்கடியை கட்டுப்படுத்தவும் புதிய நகரங்களை உருவாக்கி மக்களை அங்கு குடியமர்த்தவும் இந்தோனேசியா அரசு தீர்மானித்துள்ளது.


அதிபர் ஜோக்கோ விடோடோ

இதில் முதல்கட்டமாக இந்தோனேசியா நாட்டின் தலைநகரை ஜகர்தாவில் இருந்து ஜாவா தீவில் உள்ள வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய அந்நாட்டின் அதிபர் ஜோக்கோ விடோடோ தீர்மானித்துள்ளதாக அந்நாட்டின் பிரதான ஊடகங்கள் இன்று குறிப்பிட்டுள்ளன. #Indonesiacapital #Indonesiacapitalmove #Jakarta
Tags:    

Similar News