செய்திகள்

மு‌ஷரப் துபாயில் இருந்து மே 1-ந்தேதி பாகிஸ்தான் திரும்புகிறார்

Published On 2019-04-28 08:14 GMT   |   Update On 2019-04-28 08:14 GMT
3 ஆண்டுகளுக்கு பிறகு மு‌ஷரப் துபாயில் இருந்து மே 1-ந்தேதி பாகிஸ்தான் திரும்புகிறார். #PervezMusharraf

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் மு‌ஷரப் (75). இவர் மீது 2014-ம் ஆண்டு தேசதுரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

இந்தநிலையில் 2016-ம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்காக துபாய் சென்றார். ஒருவிதமான அபூர்வ நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

எனவே அவர் பாகிஸ்தான் திரும்பாமல் துபாயிலேயே தங்கியுள்ளார். இதற்கிடையே அவர் மீதான தேசதுரோக வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அவர் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகவில்லை.

கடந்த 1-ந்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி ஆசிப் சயித் கோசா தலைமையிலான பெஞ்ச் மு‌ஷரப்புக்கு எச்சரிக்கை விடுத்தது.

அவர் கோர்ட்டில் ஆஜராகாவிட்டால் தனது தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கும் தகுதியை இழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர்.

எனவே அவர் வருகிற மே 1-ந்தேதி பாகிஸ்தான் திரும்புகிறார். 2-ந்தேதி கோர்ட்டில் ஆஜராகி தனது வாக்கு மூலத்தை பதிவு செய்கிறார்.

இந்த தகவலை மு‌ஷரப்பின் வக்கீல் சல்மான் சப்தார் நிருபர்களிடம் தெரிவித்தார். மு‌ஷரப் தனது டாக்டரின் அறிவுரைப்படி நடந்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.  #PervezMusharraf

Tags:    

Similar News