செய்திகள்

மெல்லிய ஓடு கொண்ட அபூர்வ இன பெண் ஆமை இறந்தது

Published On 2019-04-16 00:50 GMT   |   Update On 2019-04-16 00:50 GMT
உலகிலேயே மிகவும் மெல்லிய ஓடு கொண்ட ‘யாங்ட்ஷி’ என்று அழைக்கப்படும் அபூர்வ இன பெண் ஆமை வயது மூப்பு காரணமாக உயிரிழந்தது. #Yangtze #Turtle
பீஜிங்:

‘யாங்ட்ஷி’ என்று அழைக்கப்படும் ஆமைகள் தான் உலகிலேயே மிகவும் மெல்லிய ஓடு கொண்ட ஆமைகளாக அறியப்படுகின்றன. வரைமுறையற்ற வேட்டை, நீர் மாசுபாடு போன்ற காரணங்களால் இந்த வகை ஆமைகள் பேரழிவைச் சந்தித்தன.

இந்த அபூர்வ இனத்தை சேர்ந்த கடைசி 4 ஆமைகளில் 2 ஆமைகள் சீனாவில் உள்ள ஷூஷோ உயிரியல் பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வந்தன. இவற்றில் ஒன்று ஆண் ஆமை, மற்றொன்று பெண் ஆமை ஆகும். மற்ற 2 ஆமைகளும் வியட்நாமில் உள்ளன.

இந்த நிலையில், சீனாவின் ஷூஷோ உயிரியல் பூங்காவில் இருந்த 90 வயதான பெண் ஆமை வயது மூப்பு காரணமாக கடந்த சனிக்கிழமை உயிரிழந்தது. யாங்ட்ஷி இனத்தின் கடைசி பெண் ஆமையும் இறந்துவிட்டதால், இனப்பெருக்கம் அடைய முடியாத நிலையில் அந்த ஆமை இனம் அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #Yangtze #Turtle
Tags:    

Similar News