செய்திகள்

ஈரான் தலைவர் அவமதிப்பு - அமெரிக்க கடற்படை வீரருக்கு 10 ஆண்டு ஜெயில்

Published On 2019-03-18 06:42 GMT   |   Update On 2019-03-18 06:42 GMT
ஈரான் தலைவர் படத்தை ஆன்லைனில் வெளியிட்டு அவமதித்ததாக அமெரிக்க கடற்படை வீரருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #MichaelWhite
தெக்ரான்:

அமெரிக்காவை சேர்ந்த கடற்படை வீரர் மைக்கேல் ஒயிட் (வயது 46). இவர் அமெரிக்க கடற்படையில் 13 ஆண்டுகள் பணிபுரிந்தார். இவர் ஈரானை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தார்.

‘ஆன்லைன்’ மூலம் இருவரும் காதல் வசப்பட்டனர். எனவே அந்த பெண்ணை பார்க்க கடந்த ஆண்டு ஈரான் சென்றிருந்தார். அதன் பின்னர் அவர் நாடு திரும்பவில்லை. அவர் பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் அவர் கடந்த ஜூலை மாதம் ஈரானில் மஷாத் என்ற நகரில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இவர் ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமெனியின் படத்தை ஆன்லைனில் வெளியிட்டு அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்றது. இதில் மைக்கேல் ஒயிட்டுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தகவலை ஒயிட்டின் வக்கீல் மார்க் சயித் தெரிவித்துள்ளார். #MichaelWhite
Tags:    

Similar News