செய்திகள்

பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம் - அமெரிக்காவிடம் பாகிஸ்தான் உறுதி

Published On 2019-03-12 13:49 IST   |   Update On 2019-03-12 16:16:00 IST
இந்தியாவுடனான பதட்டத்தை தணிக்க பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம் என்று அமெரிக்காவிடம் பாகிஸ்தான் உறுதி அளித்துள்ளது. #Militantsattack

வாஷிங்டன்:

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எல்லையில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையேயான பதட்டத்தை தணிக்க அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெக்மூத் குரேஷியையும், இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலேயையும் அழைத்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டன் பேசினார்.

அப்போது பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ்- இ-முகமது மற்றும் பல பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான கடுமையான அர்த்தமுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்தியாவுடனான பதட்டத்தை தணிக்க பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவரிடம் குரேஷி உறுதி அளித்தார். இந்த தகவலை ஜான் பால்டன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி மைக் பாம்பி யோவுடன் இந்திய வெளியுறவு துறை செயலாளர் விஜய்கோகலே சந்தித்தார். அப்போது புல்வாமா தாக்குதல் குறித்தும், பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் ஆலோசித்தனர். #Militantsattack

Tags:    

Similar News