செய்திகள்

அமெரிக்காவில் வாட்டி வதைக்கும் கடும் குளிர் - வீடு இல்லாதவர்களை ஓட்டல் அறையில் தங்கவைத்த பெண்

Published On 2019-02-04 21:07 GMT   |   Update On 2019-02-04 21:07 GMT
சிகாகோ நகரில் வீடு இல்லாத நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு உணவு மற்றும் உடைகள் வழங்கியதோடு, அவர்கள் தங்குவதற்கு ஓட்டல்களில் அறையும் எடுத்துக்கொடுத்து ஆச்சரியப்படுத்தி உள்ளார் கேண்டிஸ் பெய்ன். #Chicago #CandicePayne #HomelessPeople
வாஷிங்டன்:

அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணங்களில் வரலாறு காணாத அளவுக்கு கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு நிலவுகிறது. குறிப்பாக இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிகாகோ நகரில் மைனஸ் 25 டிகிரி செல்சியஸ் மற்றும் அதற்கும் குறைவாக வெப்ப நிலை பதிவாகி வருகிறது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். வீடுகள் இல்லாமல் பொதுஇடங்களில் வசித்து வரும் மக்களின் நிலை மிகவும் மோசமாகி உள்ளது. கடும் குளிர்காற்றை தாங்கிக்கொண்டு பனித்துகள்களின் மீது படுத்து உறங்கவேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.



இந்த நிலையில் சிகாகோ நகரில் வீடு இல்லாத நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு உணவு மற்றும் உடைகள் வழங்கியதோடு, அவர்கள் தங்குவதற்கு ஓட்டல்களில் அறையும் எடுத்துக்கொடுத்து ஆச்சரியப்படுத்தி உள்ளார் ஒரு பெண். கேண்டிஸ் பெய்ன் என்கிற அந்த பெண் அங்குள்ள ஒரு ஓட்டலில் ஒரு அறைக்கு, ஒருநாள் 70 டாலர் வீதம் கட்டணமாக கொடுத்து 30 அறைகளை எடுத்து வீடு இல்லாதவர்களை தங்கவைத்துள்ளார்.

அவர் இந்த திட்டம் குறித்து தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்ததும் அவருக்கு அனைத்து வகையிலும் உதவ தன்னார்வலர்கள் குவிந்தனர். அத்துடன் அவரது வங்கி கணக்கில் பணத்தையும் கொட்டி வருகிறார்கள்.   #Chicago #CandicePayne #HomelessPeople
Tags:    

Similar News