செய்திகள்

ரஷியாவில் கியாஸ் கசிந்து விபத்து - பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

Published On 2019-01-01 18:33 IST   |   Update On 2019-01-01 18:33:00 IST
ரஷியாவின் குடியிருப்பில் காஸ் கசிந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. #RussiaGasExplosion
மாஸ்கோ:

ரஷியா நாட்டின் மாக்னிடோகோர்ஸ்க் பகுதியில் உள்ள ஆர்ஸ்க் நகரில் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் நேற்று திடீரென காஸ் கசிந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் குடியிருப்பில் வசித்து வந்த 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இரு குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் காணாமல் போன பலரை தேடி வருகிறோம் என முதல் கட்ட தகவல் வெளியானது.
 
தகவலறிந்து தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் அந்த குடியிருப்பு கட்டிடம் பலத்த சேதமடைந்தது.

இந்நிலையில், காஸ் கசிந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய மேலும் 3 பேரின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டது. இதையடுத்து, இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். #RussiaGasExplosion
Tags:    

Similar News