செய்திகள்

ராணுவ சோதனை சாவடி மீது காரை மோதிய பாலஸ்தீன வாலிபர் சுட்டுக்கொலை

Published On 2018-12-21 19:12 GMT   |   Update On 2018-12-21 19:12 GMT
ராணுவ சோதனை சாவடி மீது காரை மோதிய பாலஸ்தீன வாலிபரை இஸ்ரேல் ராணுவவீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் பாலஸ்தீன வாலிபர் பலியானார். #Palestine #Israel
ரமல்லா:

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. சர்ச்சைக்குரிய மேற்கு கரை நகரில் இஸ்ரேலியர்களை குறிவைத்து பாலஸ்தீனர்கள் தாக்குதல் நடத்துவதும், அவர்களை இஸ்ரேலிய போலீசார் அல்லது ராணுவவீரர்கள் சுட்டுக்கொல்வதும் வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மேற்கு கரை நகரில் அல்-பீரக் என்கிற இடத்தில் உள்ள இஸ்ரேல் ராணுவ சோதனை சாவடி மீது பாலஸ்தீன வாலிபர் ஒருவர் காரை ஓட்டி வந்து மோதினார். இதையடுத்து இஸ்ரேல் ராணுவவீரர்கள் அந்த காரின் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் காரை ஓட்டிவந்த பாலஸ்தீன வாலிபரின் உடலை துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. அவர் காருக்குள்ளேயே பலியானார். சுட்டுக்கொல்லப்பட்ட அந்த நபர் கிழக்கு ஜெருசலேமின் ராஸ் அல்-அமுவுத் பகுதியை சேர்ந்த அகமத் அப்பாசி (வயது 21) என்பது தெரியவந்துள்ளது.

மேற்கூறிய தகவல்கள் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #Palestine #Israel
Tags:    

Similar News