செய்திகள்

துருக்கியில் 2 ஆயிரம் பேருக்கு ஆயுள் தண்டனை

Published On 2018-12-19 05:53 GMT   |   Update On 2018-12-19 05:53 GMT
துருக்கியில் 2016-ம் ஆண்டில் ராணுவ புரட்சியில் ஈடுபட்ட 2 ஆயிரம் பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. #Turkishcourt #tayyiperdogan
கங்காரா:

துருக்கி நாட்டின் அதிபர் ரீசெப் தய்யீப் எர்டோகன். இவருக்கு எதிராக கடந்த 2016-ம் ஆண்டில் திடீர் ராணுவ புரட்சி ஏற்பட்டது. பொதுமக்கள் உதவியுடன் அதை அதிபர் எர்டோகன் முறியடித்தார்.



இச்சம்பவத்தில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகள், வீரர்கள், நீதிபதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் மீதான வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் 2 ஆயிரம் பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களில் 1934 பேர் தங்கள் ஆயுள் முழுவதும் சிறையில் தண்டனை அனுபவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 938 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #Turkishcourt #tayyiperdogan
Tags:    

Similar News