செய்திகள்

நியூ கலிடோனியாவில் அடுத்தடுத்து இருமுறை பயங்கர நிலநடுக்கம்

Published On 2018-12-05 07:46 GMT   |   Update On 2018-12-05 08:43 GMT
பிரான்ஸ் நாட்டின் தீவு கூட்டங்களில் ஒன்றான நியூ கலிடோனியாவில் இன்று அடுத்தடுத்து தாக்கிய 7.5 மற்றும் 6.6 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #earthquake #newcaledonia
நயுமியா:

தெற்கு பசிபிக் கடல் பிராந்தியத்தில் நியூசிலாந்து நாட்டின் வடக்கு பகுதியில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுமார் 24 ஆயிரம் தீவு கூட்டம் அமைந்துள்ளது. பனைமரங்கள் சூழ்ந்த இந்த தீவு கூட்டத்தில் உள்ள பவளப்பாறைகள் மற்றும் இயற்கை எழிலை கண்டு மகிழ்வதற்காக ஏராளமான உள்நாட்டு மக்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் நீர் சறுக்கு விளையாட்டுக்காக இங்கு வந்து செல்கின்றனர்.

இந்த தீவு கூட்டத்தில் உள்ள முக்கிய பகுதியான நியூ கலிடோனியாவில் (உள்நாட்டு நேரப்படி) மாலை சுமார் 3.30 மணியளவில் 7.5 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
    
நிலநடுக்கத்துக்கு பிறகு தொடர்ந்து அடிக்கடி பலமுறை நில அதிர்வுகளும் ஏற்பட்டது. கடல் அலைகள் 3 மீட்டருக்கும் அதிகமாக எழும்பி கரையை தாக்கியது. அதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.



அருகாமையில் உள்ள தீவு நாடுகளான வனாது, பிஜி ஆகியவற்றுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. கடலோரத்தில் தங்கியிருக்கும் மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

நியூகலிடோனியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதும் நியூசிலாந்திலும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் அது வாபஸ் பெறப்பட்டது.

இந்த நிலநடுக்கம் தாக்கிய சுமார் இரண்டு மணிநேரத்துக்கு பின்னர் 6.6 அளவிலான இரண்டாவது நிலநடுக்கம் தாக்கியது. இந்த இரு நிலநடுக்கங்களால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை. #earthquake #newcaledonia
Tags:    

Similar News