செய்திகள்

இலங்கை பாராளுமன்றத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்- ராஜபக்சே வலியுறுத்தல்

Published On 2018-11-26 05:58 GMT   |   Update On 2018-11-26 05:58 GMT
இலங்கை பாராளுமன்றத்தை கலைத்து விட்டு மீண்டும் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என ராஜபக்சே வலியுறுத்தி உள்ளார். #Rajapakse #srilankaparliament
கொழும்பு:

இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை நீக்கி விட்டு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா நியமித்தார். இதனால் அங்கு அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.

சிறிசேனாவின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ராஜபக்சேவுக்கு பாராளுமன்றத்தில் போதிய மெஜாரிட்டி இல்லை. அதனால் அவர் மீது 2 தடவை கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இருந்தும் ரனில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்க அதிபர் சிறிசேனா மறுத்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது பிரதமராக பதவி வகிக்கும் ராஜபக்சே முதன் முறையாக டி.வி.யில் பேசினார். அப்போது அதிபர் சிறிசேனா நேர்மையான மற்றும் உண்மையான அரசை நடத்தி வருகிறார். ஆனால் இது இடைக்கால அரசுதான்.

எனவே நிலையான அரசு அமைய வேண்டியது அவசியம். ஆகவே பாராளுமன்றத்தை கலைத்து விட்டு மீண்டும் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும்” என்றார்.

இதற்கிடையே அதிபர் சிறிசேனா வெளிநாட்டு பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார். அப்போது பிரதமர் பதவியில் ராஜபக்சேவை நியமித்தது ஏன் என விளக்கம் அளித்தார்.



அவர் கூறும்போது, “ரனில் விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியவுடன் சபாநாயகர் கரு.ஜெயசூர்யா மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் துணைத் தலைவர் சஜித் பிரேமதாசா ஆகிய 2 பேரில் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

ஆனால் பிரதமர் பதவி ஏற்க இருவரும் மறுத்து விட்டனர். எனவேதான் 3-வது நபரான மகிந்த ராஜபக்சேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது” என்றார். #Rajapakse #srilankaparliament
Tags:    

Similar News