செய்திகள்

பாகிஸ்தானில் சீன தூதரகம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 2 போலீசார் பலி

Published On 2018-11-23 10:26 GMT   |   Update On 2018-11-23 10:26 GMT
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள சீன தூதரகத்தில் தற்கொலைப்படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 2 போலீசார் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். #PakistanTerrorAttack
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் கராச்சி நகரில் சீன தூதரகம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை அந்த தூதரகத்தில் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் குழுமியிருந்தனர்.

இந்நிலையில், சீன தூதரகத்தில் திடீரென 3 தற்கொலைப்படையினர் நுழைந்தனர். அவர்கள் தங்களிடம் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர்.

இந்த தாக்குதலில் பாதுகாப்பு பணியில் இருந்த 2 போலீசார் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர்.  அவர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.



பாகிஸ்தானில் சீன தூதரகம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு சீனா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. 

இதேபோல், இந்தியா சார்பில் இந்திய வெளியுறவு துறை வெளியிட்டுள்ள செய்தியில், பாகிஸ்தானில் சீன தூதரகம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. மேலும், வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளது. #PakistanTerrorAttack
Tags:    

Similar News