செய்திகள்

ரோந்து பணியில் பறக்கும் மோட்டார் சைக்கிள் - நவீனமடையும் துபாய் காவல்துறை

Published On 2018-11-11 10:15 GMT   |   Update On 2018-11-11 10:29 GMT
பல்வேறு புதிய தொழில்நுட்பங்களில் கலக்கி வரும் துபாய் போலீசார், தற்போது பறக்கும் மோட்டார்சைக்கிள்களையும் பயன்படுத்தி பயிற்சி செய்து வருகின்றனர். #DubaiPolice #Hoversurf #FlyingMotorbikes
அபுதாபி: 

உலகின் மிகவும் விரும்பப்படும் சுற்றுலா நகரங்கள் வரிசையில் துபாய் முதன்மை வகிக்கிறது. மேலும், உலக நாடுகளை அதீத தொழில்நுட்ப பயன்பாடுகளினால் வியப்பில் ஆழ்த்தும் நாடுகளில் ஒன்றாகவும் துபாய் பார்க்கப்படுகிறது.

பல்வேறு உலக நாடுகளில் வானத்தில் பறக்கும் சிறிய ரக வாகனங்கள் அதிகம் பயன்படுத்தப்படாத நிலையில், துபாய் போலீசார் பறக்கும் மோட்டார்சைக்கிள்களை பயன்படுத்த துவங்கியுள்ளனர். இதன்மூலம் வானத்தில் இருந்தபடியே கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள முடியும்.

இந்த ஹோவர் பைக்கை ரோந்து பணிகளுக்காகவும், விபத்தில் சிக்குபவர்களுக்கு முதலுதவி அளிக்கும் விதத்திலும் பயன்படுத்த துபாய் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதனை ரிமோட் கன்ட்ரோல் முறையிலும் ஆள் இல்லாமலும் இயக்கலாம்.



ஸ்கார்பியன் என அழைக்கப்படும் புதிய பறக்கும் மோட்டார்சைக்கிள் கலிபோர்னியாவை சேர்ந்த ஹோவர்சர்ஃப் (Hoversurf) எனும் தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைத்துள்ளது. நான்கு இறக்கைகள் வாகனத்தின் இருக்கையை சுற்றி நான்கு முனைகளில் பொருத்தப்பட்டுள்ளது.

ஹோவர்சர்ஃப் மோட்டார்சைக்கிள் தொடர்ச்சியாக 25 நிமிடத்துக்கு வானத்தில் பறக்கும் என்றும், மணிக்கு 64 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. ஒருவர் மட்டும் பயணம் செய்யக்கக்கூடிய ஸ்கார்பியான் தானியங்கி முறையில் இயங்கும் என்றும் அதிகபட்சம் 272 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 2020-ம் ஆண்டில் இந்த பறக்கும் மோட்டார்சைக்கிள்களின் பயன்பாடு வரவுள்ளது என துபாய் போலீசார் தெரிவித்துள்ளனர். #DubaiPolice #Hoversurf #FlyingMotorbikes
Tags:    

Similar News