செய்திகள்

மறைந்த பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலருக்கு ஐநா விருது

Published On 2018-10-27 16:42 IST   |   Update On 2018-10-27 16:42:00 IST
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மறைந்த மனித உரிமை ஆர்வலர் அஸ்மா ஜஹாங்கீருக்கு ஐக்கிய நாடுகள் சபையின் விருது வழங்கப்பட உள்ளது. #PakistanActivist #AsmaJahagir #UNAward
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மனித உரிமை ஆர்வலராக செயல்பட்டவர் அஸ்மா ஜஹாங்கீர். இவர் கடந்த பிப்ரவரி மாதம் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் இந்த ஆண்டுக்கான விருதுக்கு பாகிஸ்தானின் மனித உரிமை ஆர்வலர் அஸ்மா ஜஹாங்கீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை தவிர, இந்த விருதுக்கு மேலும் 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.



தான்சானியா நாட்டை சேர்ந்த ரெபேக்கா கியூமி, பிரேசில் நாட்டை சேர்ந்த வழக்கறிஞர் ஜோனியா வாப்பிச்சானா ஆகியோரும் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல், அயர்லாந்து நாட்டில் செயல்பட்டு வரும் மனித உரிமை அமைப்பும் இந்த விருதைப் பெறுகிறது. உலக மனித உரிமை தினமான டிசம்பர் 10-ம் தேதி நியூயார்க்கில் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.

அஸ்மா ஜஹாங்கீருக்கு அவரது மறைவுக்குப்பின் இந்த விருது வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #PakistanActivist #AsmaJahagir #UNAward
Tags:    

Similar News