செய்திகள்

பாகிஸ்தானில் கடத்தல் பெட்ரோல் கொண்டு சென்ற வேன் லாரியுடன் மோதல் - 7 பேர் பலி

Published On 2018-10-23 14:57 IST   |   Update On 2018-10-23 14:57:00 IST
ஈரான் எல்லைப்பகுதியில் இருந்து பெட்ரோல் கடத்திச் சென்ற வேன் மீது இன்று லாரி மோதிய விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். #Accident
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் ஈரான் நாட்டின் எல்லைப்பகுதியையொட்டியுள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் வசிப்பவர்கள் ஈரான் எண்ணெய் கிணறுகளில் இருந்து குறைந்த விலைக்கு பெட்ரோல் வாங்கி கள்ளத்தனமாக பாகிஸ்தானில் உள்ள பிறபகுதிகளுக்கு கடத்திச் சென்று அதிக விலைக்கு விற்று லாபம் சம்பாதித்து வருகின்றனர்.

அவ்வகையில், பலூசிஸ்தான் மாகாண தலைநகரான குவெட்டா நகரில் இருந்து சிபி என்ற இடத்தை நோக்கி கடத்தல் பெட்ரோல் ஏற்றிச் சென்ற ஒரு வேன் இன்று மாச் என்ற பகுதியில் உள்ள சோதனைச்சாவடி அருகே வேகமாக வந்த லாரி மீது மோதியது.



மோதிய வேகத்தில் அந்த வேன் தீபிடித்து எரிந்தது. இந்த விபத்தில் சிக்கிய 5 பேர் சம்பவ இடத்திலும் இருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர். #Accident

Tags:    

Similar News