செய்திகள்

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடுப்பு

Published On 2018-10-11 05:59 IST   |   Update On 2018-10-11 05:59:00 IST
பப்புவா நியூ கினியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகியது. #PapuaNewGuinea #Tsunami #Earthquake
போர்ட் மோர்ஸ்பை :

பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவின் போர்கேரா மாகாணத்தில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

பிரிட்டனின் கிம்பே தீவில் இருந்து கிழக்கே 125 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் ராட்ச அலைகள் ஏற்பட்டதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சேதங்கள் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. #PapuaNewGuinea #Tsunami #Earthquake 
Tags:    

Similar News