செய்திகள்

அமெரிக்காவின் அணுசக்தி பிரிவு தலைவர் பதவிக்கு இந்திய பெண்

Published On 2018-10-04 19:02 GMT   |   Update On 2018-10-04 19:02 GMT
அமெரிக்காவின் அணுசக்தி பிரிவு தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் அதிகாரி ரீட்டா பரன்வாலை டிரம்ப் பரிந்துரைத்துள்ளார். #DonaldTrump #RitaBaranwal #NuclearEnergyOffice
வாஷிங்டன்:

அமெரிக்காவின் அதிநவீன அணு உலைகளின் மேம்பாட்டுக்கான புதிய சட்டம் ஒன்றில் ஜனாதிபதி டிரம்ப், கடந்த வாரம் கையெழுத்து போட்டார். இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் எரிசக்தி துறையின் கீழ் உள்ள அணுசக்தி பிரிவுக்கு புதிய தலைவர் தேர்வு நடக்கிறது.

இந்த பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் அதிகாரி ரீட்டா பரன்வாலை டிரம்ப் பரிந்துரைத்துள்ளார். இவரை செனட் உறுப்பினர்கள் ஓட்டுப்போட்டு தேர்வு செய்வார்கள்.



இதில் அவரது நியமனம் உறுதியானால், அமெரிக்காவின் அணுசக்தி தொழில்நுட்ப ஆய்வு, மேம்பாடு மற்றும் நிர்வாகத்துக்கு ரீட்டாவே பொறுப்பாவார் என வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டு உள்ளது. இவர் தற்போது அமெரிக்க அணுசக்தி துறையில் விரைவான கண்டுபிடிப்புக்கான திட்டத்தின் இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

அமெரிக்காவின் எம்.ஐ.டி.யில் பி.ஏ. பட்டம் பெற்ற இவர் மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. பட்டமும் பெற்று உள்ளார். பின்னர் நாட்டின் அணுசக்தி துறையின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. #DonaldTrump #RitaBaranwal #NuclearEnergyOffice
Tags:    

Similar News