செய்திகள்

புர்கா குறித்து நான் தெரிவித்த கருத்தில் உறுதியாக இருப்பதால் மன்னிப்பு கேட்க மாட்டேன் - போரிஸ் ஜான்சன்

Published On 2018-09-28 21:20 GMT   |   Update On 2018-09-28 21:21 GMT
முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவை அஞ்சல் பெட்டியுடன் ஒப்பிட்டு பேசிய போரிஸ் ஜான்சன், தனது கருத்து ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் சக உறுப்பினர்களால் தவறாக சித்தரிக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். #BorisJohnson #TheresaMay #ConservativeParty
லண்டன்:

பிரெக்ஸிட் விவகாரத்தில் பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சமீபத்தில் வெளியுறவு மந்திரி பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்தார். இதற்கிடையே, டென்மார்க்கில் புர்கா அணிவதற்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக கடந்த மாதம் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவை அஞ்சல் பெட்டியுடன் ஒப்பிட்டு பேசினார்.

மேலும், மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசும் போது ஒருவர் மட்டும் முகத்தை மறைத்துக்கொண்டு மற்றொறுவருடன் பேசுவது தவறு, பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள பெண்கள் புர்கா அணிந்து முகத்தை மறைத்துக்கொண்டு இருப்பதால் அவர்கள் வங்கிக்கொள்ளையர்கள் போல இருப்பதாகவும், புர்கா அடக்குமுறை சார்ந்தது எனவும் போரிஸ் ஜான்சன் கருத்து கூறியிருந்தார்.

அவரது கூற்று மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியதால், பிரதமர் தெரேசா மே இதனை கண்டித்தார். பின்னர் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி போரிஸ் ஜான்சன் மீது விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட குழு அமைத்தது. இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் ஜான்சன் மீது கடுமையான நடவடிக்கையை தெரேசா மே எடுக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மீண்டும் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த போரிஸ் ஜான்சன், புர்கா குறித்த தனது கருத்தில் இருந்து பின்வாங்கப்போவது இல்லை என தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், ’ புர்கா தொடர்பான எனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன். நான் தெரிவித்த கருத்துகளில் உறுதியாக உள்ளேன். என் சக நண்பகர்கள் எனது கருத்தில் உள்ள அர்த்தத்தை மிகவும் கவனத்துடன் புரிந்துக்கொள்ள வேண்டும்.

பிரெக்ஸிட் விவகாரத்தில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறக்கூடாது, அவ்வாறு வெளியேறினால் அது நமக்கே  பாதகமாக முடியும் என்ற எனது வலுவான கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள், அதற்கு எதிர்வினையாக புர்கா விவகாரத்தில் நான் தெரிவித்த கருத்துக்களை தவறாக சித்தரித்து மக்களிடையே கோபத்தை அதிகப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்’ என அவர் தெரிவித்தார்.  #BorisJohnson #TheresaMay #ConservativeParty
Tags:    

Similar News