செய்திகள்

அமெரிக்க காவல்துறையால் பதிமூன்று ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த செருப்பு

Published On 2018-09-15 12:25 GMT   |   Update On 2018-09-15 12:25 GMT
13 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்துபோன புகழ்பெற்ற ஜூடி கார்லாண்ட் என்ற நடிகை அணிந்த மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்ட செருப்பை தற்போது எப்.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது.
நியூயார்க்:

அமெரிக்காவில் உள்ள மின்னெசோட்டா என்ற நகரில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் மாணிக்க கற்கள் பதிக்கப்பட்டு இருந்த செருப்பு காட்சி பொருளாக வைக்கப்பட்டு இருந்தது. இந்த செருப்புகள் ‘தி விசார்டு ஆப் ஓசெட்’ படத்தில் ஜூடி கார்லாண்ட் என்ற நடிகை அணிந்த செருப்பு ஆகும்.

மின்னசோட்டா அருங்காட்சியகத்தில் இருந்த இந்த ஒரு ஜோடி செருப்பை, கடந்த 2005-ம் ஆண்டு கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் பார்க்கப்பட்டது. இந்த செருப்புகளை கண்டறிவது மிக முக்கியமான ஒன்று என அறிவிக்கப்பட்டு 13 ஆண்டுகளாக தேடப்பட்டது.

12 ஆண்டுகளாக இந்த செருப்பு குறித்து எவ்வித தகவலும் கிடைக்காத நிலையில், கடந்த ஆண்டு எப்.பி.ஐ வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. உலகின் தலைசிறந்த விசாரணை கமிஷனாக கருதப்படும் எப்.பி.ஐ இந்த வழக்கை கடந்த ஓராண்டாக விசாரித்து வந்தது.

இந்நிலையில், சமீபத்தில் ஒருவர் அளித்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த செருப்பு மீட்கப்பட்டதாக எப்.பி.ஐ அறிவித்துள்ளது. இருப்பினும் இதனை கொள்ளையடித்தவர்கள் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. எனவே இந்த வழக்கு முடியவில்லை எனவும், கொள்ளையர்களை கண்டறிய வேண்டும் எனவும் எப்.பி.ஐ தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News