செய்திகள்

ஆப்கானிஸ்தானில் 5 பாதுகாப்பு படை வீரர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் பலி

Published On 2018-09-15 06:16 GMT   |   Update On 2018-09-15 06:16 GMT
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் பயணித்த ஹெலிகாப்டர் கோளாறு காரணமாக வெடித்து சிதறியதில் ஓட்டுனர் உட்பட 5 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். #Afghanistan #HelicopterCrash
காபுல்:

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் முயற்சியில் அந்நாட்டு ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தலிபான்களை முன்னேற விடாமல் தடுப்பதும், அவற்றின் கட்டுப்பாட்டில் இருக்கும் சில நகரங்களை மீண்டும் அரசின் வசம் ஒப்படைப்பதுமே குறிக்கோளாக கொண்டு பாதுகாப்பு படை வீரர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

சமீபத்தில் தலிபான்களை எளிதில் தாக்குவதற்கு ஏதுவாக, பாதுகாப்பு படை வீரர்களை உரிய இடத்தில் கொண்டு சேர்க்க வான்வழி மார்க்கம் பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் விரைவில் பாதுகாப்பு படை வீரர்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு சென்று தாக்குதல்களை நடத்த முடிகிறது.

அவ்வாறு இன்று பாதுகாப்பு படை வீரர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று இயந்திர கோளாறு காரணமாக வெடித்து சிதறியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 4 வீரர்கள், ஒரு ஓட்டுனர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து ஃபாராஹ் மாகாணத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில் தலிபான் தாக்குதலில் இந்த விபத்து ஏற்படவில்லை எனவும், தொழில்நுட்ப கோளாறு காராணமாகவே விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். #Afghanistan #HelicopterCrash
Tags:    

Similar News