செய்திகள்

மூன்றாவது முறையாக பிரதமராக சட்ட திருத்தம் செய்கிறார் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே

Published On 2018-09-14 10:41 GMT   |   Update On 2018-09-14 10:41 GMT
2012-ம் ஆண்டு முதல் ஜப்பான் பிரதமராக உள்ள ஷின்சோ அபே தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Japan #ShinzoAbe
டோக்கியோ:

ஜப்பான் பிரதமராக உள்ள ஷின்சோ அபே கடந்த 2012-ம் ஆண்டு முதல் பதவியில் இருக்கிறார். முன்னதாக, 2009-10 ஆண்டில் அவர் பிரதமராக இருந்துள்ளார். தற்போது அவர் சார்ந்த ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி அந்நாட்டு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் உள்ளது.

இந்நிலையில், மூன்றாவது முறையாகவும் பிரதமராக விருப்பப்பட்டுள்ள அபே, தற்கான வேலைகளை தொடங்கியுள்ளார். வரும் 20-ம் தேதி கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் அபேவின் போட்டியாளரும் முன்னாள் பாதுகாப்பு மந்திரியுமான ஷிகேரு இஷிபா களமிறங்க உள்ளார்.

கட்சியில் 70 சதவிகித ஆதரவு அபேவுக்கு இருக்கும் காரணத்தால் அவர் எளிதாக வெற்றி பெருவார் என கூறப்படுகிறது. அப்படி வெற்றி பெரும் பட்சத்தில், அந்நாட்டு அரசியல் சாசனத்தை திருத்தம் செய்து மூன்றாவது முறையாகவும் பிரதமராக பதவியேற்ப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
Tags:    

Similar News