செய்திகள்

வெள்ளத்தில் மூழ்கிய மியான்மரின் 85 கிராமங்கள் - மீட்பு பணி தீவிரம்

Published On 2018-08-31 17:37 IST   |   Update On 2018-08-31 17:37:00 IST
மியான்மர் நாட்டின் ஸ்வர் சாங் என்ற அணை உடைந்ததால் 85 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. #MyanmarFlood
யாங்கூன்:

மத்திய மியன்மார் பகுதியில் உள்ள ஸ்வர் சாங் என்ற அணையின் ஒரு பகுதி உடைந்து ஊருக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் 85 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. மேலும் 63 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து அகற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  

மேலும், வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள், தீயணைப்பு வீரர்கள், மீட்பு குழுவினர் ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கி 2 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஸ்வர் சாங் அணை நீர்ப்பாசனத்துக்காக கட்டப்பட்டது என்றும், அதிக அளவில் நீரை சேமித்து வைத்திருக்கும் இந்த அணை முறையாக பராமரிக்கப்படாததாலேயே அணை உடைந்திருக்க கூடும் என கூறப்படுகிறது. #MyanmarFlood
Tags:    

Similar News