செய்திகள்

அந்தமான் தீவுகளில் 5.5 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்

Published On 2018-08-24 12:15 GMT   |   Update On 2018-08-24 12:15 GMT
அந்தமான் தீவுகளில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவிசார் ஆய்வு மையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Earthquake
அந்தமான்:

வங்காள விரிகுடா கடற்பகுதியில் சுமார் 300 தீவுகளை கொண்ட அந்தமான் தீவுகளில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.5 ஆக பதிவானது. 

பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையமாக நிலநடுக்கம் ஏற்பட்டது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் வீடுகளில் லேசான அதிர்வை உணர்ந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தால் உண்டான சேத விபரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த மாதம் அந்தமான் தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
 
முன்னதாக, பெரு - பிரேசில் நாட்டு எல்லையில் சுமார் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. #Earthquake
Tags:    

Similar News