செய்திகள்

தேர்தலில் இம்ரான்கான் வெற்றி - மோடியின் வாழ்த்துக்கு பாகிஸ்தான் வரவேற்பு

Published On 2018-07-31 04:45 GMT   |   Update On 2018-07-31 04:45 GMT
இம்ரான்கானின் வெற்றியை அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொள்ளாத நிலையில், இந்திய பிரதமர் மோடி அவரது தேர்தல் வெற்றியை வரவேற்று வாழ்த்து தெரிவித்து இருப்பதை பாகிஸ்தான் அரசு வரவேற்றுள்ளது. #ImranKhan #Modi #Pakistan
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் 118 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தெக்ரீக்-இர்-இன்சாப் கட்சியின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான் வருகிற 11-ந் தேதி பிரதமராக பதவி ஏற்கிறார்.

இதைதொடர்ந்து அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி டெலிபோனில் வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது பாகிஸ்தானில் ஜனநாயகம் ஆழமாக வேரூன்றும் என மோடி நம்பிக்கை தெரிவித்தார். பாகிஸ்தானுடன் அமைதி மற்றும் வளர்ச்சியை அண்டை நாடான இந்தியா விரும்புவதாகவும், இரு நாடுகளும் புதிய உறவை தொடங்க விழைவதாகவும் கூறினார்.

அதற்கு பதில் அளித்த இம்ரான்கான், “இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சனைகளை போர்மூலம் தீர்க்க முடியாது. பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக் கொள்ள விரும்புவதாகவும்” தெரிவித்தார். இத்தகவல் மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

இம்ரான்கானின் வெற்றியை அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் பிரதமர் மோடி இம்ரான்கானின் தேர்தல் வெற்றியை வரவேற்று வாழ்த்து தெரிவித்து இருப்பதை பாகிஸ்தான் அரசு வரவேற்றுள்ளது.

இந்தியாவின் அறிக்கை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்புக்கு மதிப்பளிப்பதாக உள்ளது. இத்தகைய போக்கு மாறாமல் பாதுகாக்க வேண்டியது அவசியம் என அதிகாரிகள் தரப்பு கருதுகிறது. #ImranKhan #Modi #Pakistan
Tags:    

Similar News