செய்திகள்

டேட்டிங் ஆப் மூலம் வந்த எமன் - ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை

Published On 2018-07-30 09:51 GMT   |   Update On 2018-07-30 09:51 GMT
ஆஸ்திரேலியாவில் படிப்பதற்காக சென்ற மவுலின் ரதோட் என்ற மாணவர், டேட்டிங் ஆப் மூலம் கிடைத்த தோழியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Australia
கான்பெரா:

சமூக வலைதளங்களின் ஆதிக்கம் சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. நன்மைகள் மட்டுமன்றி தீமைகளும் அதிக அளவில் சமூக வலைதளங்கள் மூலம் நிகழ்கிறது. இதனை கட்டுப்படுத்த இளைஞர்கள் சமூக வலைதளங்கள் மற்றும் அவற்றில் கிடைக்கும் நண்பர்கள் குறித்து விழிப்புணர்வுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டியது அவசியமாகிறது. விழிப்புணர்வு இல்லாமல், பாதுகாப்பற்ற செயலியால் ஏற்பட்ட நட்பு, இந்திய மாணவர் ஒருவரை பலி வாங்கி உள்ளது.

மவுலின் ரதோட் என்ற இந்திய மாணவர் படிப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அவர் சமீபத்தில் டேட்டிங் ஆப் மூலம் கிடைத்த பெண் தோழி ஜாமீ லீ என்பவரை சந்திக்க முதன்முறையாக அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.



அப்போது சிறிதும் எதிர்பார்க்காமல், ஜாமீ லீ, மவுலின் ரதோட்டை மிக மோசமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயங்களுடன் ரதோட் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், அவரை தாக்கிய குற்றத்துக்காக ஜாமீ கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ரதோட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்மூலம் அந்த பெண் மீது கொலை வழக்கு பதியப்பட்டு, தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.

கல்வியில் முன்னேறுவதற்காக ஆஸ்திரேலியா சென்று, தனது உயிரை விட்ட ரதோட்டை எண்ணி அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர். #Australia
Tags:    

Similar News