செய்திகள்

அமெரிக்காவில் 15 வயதில் இன்ஜினியரிங் முடித்து பி.எச்டி பயிலும் இந்திய வம்சாவளி மாணவர்

Published On 2018-07-29 16:09 IST   |   Update On 2018-07-29 16:09:00 IST
அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியான தனிஷ்க் என்ற 15 வயது சிறுவன் தனது இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு தற்போது பி.எச்.டி படிப்பை தொடங்க உள்ள நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. #US #India #TanishqAbraham
நியூயார்க்:

அமெரிக்காவில் வாழும் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன் தனிஷ்க் ஆப்ரகாம். இவர் தனது 15 வயதில் உயிரிமருத்துவம் சார்ந்த இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு தற்போது பி.எச்.டி படிப்பை துவக்கியுள்ளார். இந்த நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தனிஷ்க், மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.



மேலும், 15 வயது சிறுவன் தனிஷ்க், தீவிபத்தில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அவர்களை தொடாமல், அவர்களின் இதயத்துடிப்பை கண்டறியும் சாதனத்தையும் கண்டறிந்துள்ளார். மேலும், பல புதிய கண்டுபிடிப்புகளின் மீது ஆர்வம் கொண்ட தனிஷ்க், புற்றுநோய்க்கான புதிய சிகிச்சை முறை குறித்தும், நோயை சரிசெய்வதற்கான வழிமுறை குறித்தும் ஆராய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கலிபோர்னியா பல்கலைகழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனிஷ்க், அடுத்த 5 வருடங்களுக்குள் தனது எம்.டி படிப்பை துவங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். #US #India #TanishqAbraham
Tags:    

Similar News